Skip to content
Thamizh Padam

News

News1 min read

யோகி பாபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த கிரிக்கெட் வீரர் நட்ராஜ் !!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்று காலை முதலே தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகி பாபுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கிங் கிங் நடராஜன் தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துள்ளார்.

அண்ணன் யோகி பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் இந்த பிறந்த நாளில் உங்கள் வெற்றிகள் மற்றும் சாதனைகள் தொடரட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் யோகிபாபு உடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே யோகிபாபு உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்து இருந்தார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி யோகி பாபுவின் திரைப்படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் நடராஜன் தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp