Skip to content
Thamizh Padam

News

News1 min read

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’!

The crime thriller movie 'Violet Kanavu' (Violet Dream) is being made based on the story and screenplay of writer Rajeshkumar!

பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’. எம் 4 இண்டர்நேஷ்னல் (M4 International) வழங்கும், அப்பு மூவிஸ் (Appu Movies) சார்பில் திருமதி.ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T, இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பி.நித்யானந்தன் B.A.D.F.T, இயக்குகிறார்.

’பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘அங்காரன்’ படத்தில் நாயகியாக நடித்த ரெய்னா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர்.அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜெகன் கல்யாண் இசையமைக்கும் இப்படத்திற்கு கீதாகரண் B.V.A, ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எம்.சயீப் B.V.A, படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாஸ்கர் ராஜ் வசனம் எழுதுகிறார். ஏ.எக்ஸ்.என்.பிரகாஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சவால் ராம் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அசோக் பணியாற்ற, ஒப்பனை கலைஞராக பிரேமா பணியாற்றுகிறார். நிர்வாக தயாரிப்பு கே.தங்கராஜ் பணியாற்ற, பி.ஆர்.ஓ-வாக தர்மதுரை & சுரேஷ்சுகு பணியாற்றுகிறார். துரை விநாயகமூர்த்தி கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்களை எழுதி எழுத்துலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் படைப்புகள் தற்போது திரைப்படங்களகாவும், வெப் சீரிஸ்களாகவும் உருவாகி வரும் நிலையில், அவரது மிக முக்கியமான கிரைம் திரில்லர் நாவலை மையமாக கொண்டு ‘வயலெட் கனவு’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இதுவரை திரையில் பார்த்திராத ஒரு கிரைம் திரில்லர் அனுபவத்தை கொடுக்கும் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரும் திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலரை பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
(PRO) Dharma & Suresh

Related stories

See all
1 / 4
எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’!

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’!

Share on WhatsApp

Share

Share on WhatsApp