Skip to content
Thamizh Padam

Box office

Box office2 min read

இந்தியாவில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை!

Avengers: Endgame - Encore Creates Box Office History in India!

உலகளவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களில் தாங்களும் ஒருவர் என்பதை ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தின் வெளியீட்டின் மூலம் இந்திய மார்வெல் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் மறு வெளியீடாக உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்க ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டுள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் மோஜோ தரவுகளின்படி, மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் சுமார் 86 மில்லியன் அமெரிக்க டாலர் உலகளவில் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ள இப்படம், திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட திரைப்படங்களின் உலகளாவிய தொடக்க வசூலில் இரண்டாவது அதிகபட்ச சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதில் வட அமெரிக்காவில் 26 மில்லியன் அமெரிக்க டாலரும், சர்வதேச சந்தைகளில் 60 மில்லியன் அமெரிக்க டாலரும் வசூலாகியுள்ளன.

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்திற்கு உலகளவில் அதிக பங்களிப்பு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் வார இறுதியில் இந்தியாவில் சுமார் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ.25 கோடி) வசூலாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா (26 மில்லியன் அமெரிக்க டாலர்), சீனா (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்), இங்கிலாந்து (5.4 மில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் மெக்சிகோ (4.3 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.

மும்பை மற்றும் டெல்லி முதல் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை வரை, ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ‘அவெஞ்சர்ஸ் தருணங்களை மீண்டும் பெரிய திரையில் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். குறிப்பாக கேப்டன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ’அவெஞ்சர்ஸ், அசெம்பிள்’ தருணம் முதல் அயர்ன் மேனின் உணர்வுப்பூர்வமான இறுதி தியாகம் வரை, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் கொண்டாடி வருகின்றனர்.

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இப்படம் ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் அறிமுகப்படுத்தியுள்ள இன்ஃபினிட்டி விஷன் எனப்படும் புதிய பிரீமியம் லார்ஜ் ஃபார்மெட்(PLF) திரை அனுபவத்திலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் இந்த பிரம்மாண்டமான சாகசத்தை மேலும் பிரமாண்டமான திரை அனுபவத்துடன் கண்டு ரசிக்கலாம்.

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தின் இந்த சிறப்பு திரையிடலில், இந்த வருடம் டிசம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்துடன் தொடர்புடைய கூடுதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp