Skip to content
Thamizh Padam

News

News1 min read

"ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3"

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்கும் படம் இது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் வெங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

"ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவா ஒளிப்பதிவை மேற்கொள்ள VBR இசையமைக்கிறார்
இணை தயாரிப்பு - முரளி கிருஷ்ணன்
படத்தொகுப்பு - சித்தார்த்
கலை இயக்குனர் - G.துரைராஜ்
காஸ்டியூம் டிசைனர் - கிருத்திகா சேகர்
மக்கள் தொடர்பு - சதிஷ் - சதிஷ் குமார் (AIM)
பப்ளிசிட்டி டிசைன்ஸ் - தண்டோரா

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp