Skip to content
Thamizh Padam

News

News1 min read

விரைவில் வெளியாகவுள்ளது நாடோடிகள் 2

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

இசை - ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு - ஏகாம்பரம்

கலை - ஜாக்கி

எடிட்டிங் - ரமேஷ்

பாடலாசிரியர் – யுகபாரதி

சண்டை பயிற்சி - திலீப் சுப்புராயன்

நடனம் - திணேஷ், ஜான்

தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன்.

தயாரிப்பு - எஸ்.நந்தகோபால்

எழுதி இயக்குகிறார் - சமுத்திரகனி.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp