பிரபல சினிமா பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவா & ஜித்தன் இவர்களின் தந்தையுமான திரு RB சௌத்திரி சாலை விபத்தில் மரணமடைந்தார்.
Veteran Producer RB Choudary Dies In Car Accident

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் RB சவுத்ரி சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்திருக்கிறார். அவர் மரணம் சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
RB சவுத்ரி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். அவர் உதய்பூர் சென்ற நிலையில் அங்கு பெரிய விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். RB சவுத்ரியின் உடல் நாளை சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது.
ஹீரோ ஜீவாவின் தந்தையான இவர்
டைரக்டர்கள் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், எஸ். எழில், ராஜகுமாரன், சசி, பால சேகரன், பிருந்தா சாரதி, ரவி மரியா உட்பட 34 இயக்குநர்களை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தவர். பெரும்பாலும் வெற்றிப் படங்கள். R.B. செளத்ரி அவர்கள் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் பிஸியாக மாறியுள்ளனர்.
R.B. செளத்ரி அவர்கள் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத அனைவராலும் நன்றியுடன் என்றென்றும் நினைக்கப்படுவார்.





