Skip to content
Thamizh Padam

News

News1 min read

வீடு திரும்பிய பிரித்திவி ராஜ்!!

ஒரு வழியாக எடுத்த காரியத்தை முடித்து விட்டு, வெற்றிக்கையோடு வீடு திரும்பினார்கள் பிரதிவ்ராஜ் மற்றும் பட குழுவினர்கள். ஜார்டனின் வாடி ரம் பாலைவனத்தில் சிக்கித் தவித்து வந்த மலையாள நட்சத்திரம் பிருத்விராஜ், 58 பேர் கொண்ட படக்குழு மூன்று மாதங்கள் கழித்து, நேற்று காலை கொச்சிக்கு திரும்பினார். நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்' படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும் வீட்டிற்கு வர உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து , அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் அவரும் அவரது குழுவினரும் நன்றாகவும், தவறாமல் குழு மருத்துவர் மற்றும் ஜோர்டான் அரசாங்க மருத்துவர்களால் சோதிக்கப்பட்டு வருகின்றோம் என்று கூறினார். கடந்த 17-ஆம் தேதியுடன் ‘ஆடுஜீவிதம்' படம் முடிந்தது. அதை தொடர்ந்து 51 பெருடன் மே 21 அன்று ஜோர்டானில் இருந்து சிறப்பு விமானத்தில் ஏறி வியாழக்கிழமை மாலை டெல்லியை வந்தடைந்தனர் பின் டெல்லியில் இருந்து மற்றொரு போக்குவரத்தின் மூலம் கேரளா- கொச்சிக்கு நேற்று வந்தடைந்தனர். இதனால் பிரிதிவிராஜ் ரசிகர்களும் அவர் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp