Skip to content
Thamizh Padam

News

News1 min read

"வட சென்னை " படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது!

தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் " வட சென்னை ".

இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இது இவருக்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது !

வட சென்னை படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர்,டேனியல் பாலாஜி ,கிஷோர் குமார்,பவன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது மக்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பாடல்களும் மிகப்பெரிய அளவில் அனைவராலும் விரும்பப்பட்டு வருகின்றது. தனுஷ் ,சித்ஸ்ரீராம் மற்றும் சென்னை கானா பாடல்கள் பாடும் கலைஞர்களால் பாடல்கள் பாடப்பட்டுள்ளது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp