News1 min read
'தெறி' படத்தின் தெலுங்கு ரீமேக்கின் நாயகி இவரா⁉
கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியினையடுத்து, தற்போது கோபிசந்த் இயக்கத்தில் ‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஆர்.டி.66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பலுபு’ என்ற படத்திற்கு பிறகு நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





