Skip to content
Thamizh Padam

News

News1 min read

தாயாக இருப்பதே சிறந்தது

ஐயா படம் மூலம் அறிமுகமாகி பல கஷ்டமான சூழ்நிலைகளை கடந்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் தான் நயன்தாரா. நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் மிகுந்த காதலில் இருக்கிறார். இவர்கள் ‘நானும் ரவுடி தான்' படத் தயாரிப்பின் போது சந்தித்தனர். தற்போது இந்த ஜோடி கோலிவுட்டின் அசைக்கமுடியாத ஜோடியாக் உள்ளது. அவர்கள் எப்போதும் ஒன்றாக பிணைந்துள்ளனர் மற்றும் சமூக ஊடகங்களிலும் தவறாமல் ரசிகர்களுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். சமீபத்தில், இவர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவியது. ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக பல தருணங்களில் அவர்களின் சமூக வலைதள பதிவுகள் பதிலளித்தது.

இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு எதிர்கால அன்னையர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தின் மூலன் அறிவித்துள்ளார் நடிகை நயன்தாரா. அவர் வெளியிட ட்விட்டர் பதிவில், எதிர்கால தாய்மார்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் கையில் அழகான ஒரு குழந்தையுடன் அவர் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு இருக்கும் பல கடமைகளில் தாயாக இருப்பதே சிறந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு குறித்து தற்போது நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp