Skip to content
Thamizh Padam

News

News1 min read

தமிழ் கற்கும் பூமி பட நாயகி!

ரொம்ப பெருமையா இருக்கே!! ரசிகர்கள் ஆனந்தம் !! ரோமியோ ஜூலியட்' மற்றும் ‘போகன்' திரைப்படங்களை அடுத்து இயக்குநர் லக்ஷ்மனுடன் ஜெயம் ரவி இணைந்துள்ள திரைப்படம் ‘பூமி. இப்படம் ஜெயம் ரவியின் 25-வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் நிதி அகர்வால் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கிராமத்துப் பின்னணியில் விவசாயம் குறித்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படம் வரும் மே 1 - உழைப்பாளர் தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. படப்பிடிப்புகள அனைத்தும் ரத்தாகியுள்ள நிலையில்,பிரபலங்கள் பலரும் தங்கள் வீட்டில் பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பூமி படத்தின் கதாநாயகி நிதி அகர்வால், இந்த பூட்டுதலில் ஒரு புது மொழியை கற்றுவருகிறார். தற்போது அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தாளின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்களையும் அவற்றின் தமிழ் அர்த்தங்களையும் எழுதி வைத்துள்ளார். அவர் அந்த புகைப்படத்துடன், "ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்கிறேன்.. அது என்ன மொழி என்று யூகிக்க முடிகிறதா?" என பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்த படத்தில் தமிழை தங்லீஷில் yaar, enna, enge, yean, eppadi, saapad, tanni போன்ற சொற்களை எழுதியிருந்தார்.

அந்த போஸ்டுக்கு கீழ், தெலுங்கு மொழியைக் கற்க ஒரு பயனர் அவரிடம் கேட்டபோது, ‘சாவியாசாச்சி, இஸ்மார்ட் சங்கர் போன்ற சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள நிதி, “எனக்கு தெலுங்கு தெரியும் கயிஸ்.. நாக்கு சாலா பாக தெலுங்கு வஸ்துந்தி” என்று ரிப்ளை செய்துள்ளார்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp