News1 min read
'தலைவர் 168’ படத்தின் தலைப்பு இதுவா⁉
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துள்ள படம் 'தர்பார்'. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும், ரஜினியின் 168வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கியுள்ளது. ரஜினியுடன் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், விவேக், சூரி உள்பட பலர் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி முதல் தொடங்கும் எனவும், 'வியூகம்' என தலைப்பு வைக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.





