Thala 59 Next Movie Update
தல ரசிகர்களுக்கு நேற்று சந்தோஷப்படுத்திய விஷயம் என்ன என்றால் தல 59 படத்தினுடைய அறிவிப்பு தான். விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிற தல 59 படத்தை சதுரங்க வேட்டை புகழ் H. வினோத் இந்த படத்தை இயக்குகிறார். முக்கியமாக இந்த படத்தின் இசைமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதுபோக 2.0 படத்தில் ஒளிப்பதிவில் கலக்கியிருந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா தல 59 வது படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான செய்தி தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே தல 59 பூஜையில் கலந்துகொண்டதால் இவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகின்றது. இவரை போலவே AAA இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது .





