Skip to content
Thamizh Padam

News

News1 min read

சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு தெரிஞ்ச ஒரே வழி இதுதான்: கார்த்தியின் வைரல் புகைப்படம்!

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுமான சூர்யா மற்றும் கார்த்தி அவ்வப்போது தங்களது பேட்டிகளிலும் சமூக வலைதளங்களிலும் சிறுவயதில் நடந்த வேடிக்கையான நிகழ்வுகள் பற்றிய மலரும் நினைவுகளைப் கூறுவார்கள் என்பதை

அந்த வகையில் தற்போது நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் சூர்யா அண்ணனை எப்படி வெறுப்பேற்றுவேன் என்பது குறித்து பதிவு செய்து உள்ளார். சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு கிடைத்த ஒரே வழி அவர் அணிந்திருக்கும் சட்டை போலவே நானும் அணிந்து கொள்வதுதான். இது போல் நீங்களும் உங்கள் அண்ணன் தம்பியுடன் ஒரே உடையை அணிந்து வெறுப்பேற்றி இருக்கிறீர்களா என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு ஏராளமான ரசிகர்கள் ’ஆமாம்’ என்று பதில் அளித்துள்ளார்கள்

மேலும் கார்த்தி தனது பதிவில் சூர்யாவுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த பதிவில் இருவரும் ஒரே டிசைனில் சட்டை அணிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் இந்த பதிவுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp