Skip to content
Thamizh Padam

News

News1 min read

சிவகார்த்திகேயனின் ‘SK15’ "ஹீரோ" 'HERO' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் ‘SK15’ திரைப்படம் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

இதனிடையே, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் ‘SK15’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் நாச்சியார் படத்தில் நடித்த இவானா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருப்போரூர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் தொடர்ந்து 10 நாள் படமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp