Skip to content
Thamizh Padam

News

News1 min read

அடுத்த சந்திரமுகி சிம்ரன் ?

மாடர்ன் சந்தரமுகியாக கலம் களமிறங்க தயாராகும் சிம்ரன். சந்திரமுகி 2வில் நடடிக்கிறாரா ?சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் ‘சந்திரமுகி'. இத்திரைப்படம் 200நாடகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக ‘சந்திரமுகி2' திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு இயக்கவுள்ளார், அதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது . இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

சந்திரமுகியில், ஜோதிகாவின் பங்கு மிக முக்கியமானது, அவர் லாரன்ஸுடன் இரண்டாவது பாகத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தான் சந்திரமுகி-2வில் நடிக்கவில்லை என்ற கூறியுள்ளார் நடிகை ஜோதிகா. மே 29-ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்' திரைப்படம் குறித்து ஆன்லைன் ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில், ஜோதிகா சந்திரமுகி தொடர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் "இல்லை, படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை" என்று கூறியுள்ளார். அதேசமயம், சந்திரமுகி வேடத்தில் வேறு யார் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு "சிம்ரன்" என்று கூறியுள்ளார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp