Skip to content
Thamizh Padam

News

News1 min read

செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் போன்ற இன்னும் சில படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள்.

இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கிருந்தார். நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசன்ட்ரா என்று இரு கதாநாயகிகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த படம் முடிவடைந்த நிலையிலும் இன்னும் திரைக்கு வராதது கேள்விக குறியாகவே உள்ளது.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்க் மற்றும் பலர் நடித்த ‘என்.ஜி.கே.’ படம் மே மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. இதற்காக மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்ற இந்த நேரத்தில் அடுத்தாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், கன்னி பெண்களின் கனவு கண்ணனாக கோலிவுட்டில் வலம் வரும் ஜெயம் ரவி நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் இவர் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகின்றது. சமீபத்தில் வெளிவந்த அடங்கமறு படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து தற்போது மோகன் ராஜா இயக்கியத்தில் கோமாளி படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp