Skip to content
Thamizh Padam

News

News1 min read

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!

பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி போன்ற படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. சந்தோஷ் நாராயணனுக்கு இது 25வது திரைப்படம்.

தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரிக்க, லைக்கா ப்ரொடொக்சன்ஸ் இந்த படத்தை அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகெங்கும் ரிலீஸ் செய்கிறது.

தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது சீனாவில் இம்மாதம் (OCT) 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை நடக்கும் இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட இருக்கிறது. இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. சீனாவில் நடத்தப்படும் இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் வடசென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp