சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் இணைந்த சீமான்
Seeman joins Sivakarthikeyan in Seyon

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் மற்றும் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
மதுரை வாழ்வியல் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்து அசத்திய சீமான், தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள செய்தி திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





