Ranger Tamil Movie Title Breakdown
நடிகர் சிபிராஜ் அவர்கள் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை நம்மிடம் கொடுத்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சிபிராஜ் அவர்களின் நடிப்பில் ரங்கா, வால்டர் என்று இரண்டு படங்கள் நமக்காக கூடிய சீக்கிரமே வெளிவர இருக்கிறது. தற்போது ரங்கா படத்தினுடைய டீஸர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று சிபிராஜியின் அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகிருந்தது. தரணிதரண் இயக்கத்தில் சிபிராஜ் நடித்து கொண்டிருக்கின்ற படம்தான் ரேஞ்சர். ஏற்கனவே ஜாக்சன் துரை படத்தில் பணியாற்றி இருவரும் தற்போது இந்த ரேஞ்சர் படத்தில் இணைந்துள்ளனர். அதர்வா நடிப்பில் வெளிவந்த 100 படம் உள்ளிட்ட இன்னும் ஒரு சில படங்களை தயாரித்த ஆரா சினிமாஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தில் சிபிராஜ்க்கு ஜோடியாக "சத்யா " படத்தில் இணைந்து நடித்த ரம்யா நம்பீசன் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் கதை போன வருடம் நடந்த அவ்னி புலின் உண்மை கதை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் பார்க்கும் போது, சிபிராஜ் ஒரு வனத்துறை அதிகாரியாக இருப்பது போல் உள்ளது ஏனென்றால் அவர் நிற்பதற்கு பின்பு ஒரு ஜீப் உள்ளது அதில் தமிழ் நாடு வனத்துறை என்றும், அதன் மேல் துப்பாக்கியும் உள்ளது. முக்கியமாக சிபிராஜியின் எதிரில் ஒரு புலி ஓன்று இருப்பது போலும், அதன் அருகில் ரத்தம் சிந்தி இருப்பதும் போல் உள்ளது. சிபிராஜிக்கும், புளிக்கும் இடையில் உள்ள ரேஞ்சர் என்ற தலைப்பில் புலிகளின் கால் வரிகள் பதிந்தது போலும், ஒரு விதமான நெருப்பு போல் டைட்டில் உள்ளது. குறிப்பாக தும்பா படத்தை தொடர்ந்து காட்டை நமக்கு வேறுவிதமாக உண்மை கதையுடன் சொல்ல இருக்கின்ற படம்தான் இந்த ரேஞ்சர் படம் இருக்கும் என்று தோன்ற வைக்கின்றது.





