Skip to content
Thamizh Padam

News

News1 min read

வயசானாலும் ஸ்டைலும் அழகும் போகவே இல்லை !!

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் கதாநாயகி, குணசித்திர வேடங்கள் உள்பட பல வேடங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனின் நீச்சல் குள புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் நடித்த ’படிக்காதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மனதில் இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன், அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும், தான் நடித்து வரும் படங்களின் புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார்

இந்த நிலையில் தற்போது அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். எந்த நேரமும் மகிழ்ச்சியாக இருந்தால் நம்முடைய ஸ்டைல் நம்மை விட்டு போகாது என்ற கேப்ஷனுடன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு ’வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டு போகவே இல்லை’ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள்

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp