Skip to content
Thamizh Padam

News

News1 min read

'பொன்னியின் செல்வன்' டிசம்பரில் ஆரம்பம்

செக்க செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அடுத்ததாக நாம் அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்ற படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கான அதிகார பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் படத்துக்கான செய்திகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து கொண்டிருக்கிறார்.

முக்கியமாக எம் ஜி ஆர், கமல் ஹாசன் என்று பலர் எடுக்க நினைத்த கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் இயக்க போகிறார் என்றதும் எல்லோரும் ஈடுபாடுடன் இந்த படத்தின் அதிகார பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 800 கோடி பட்ஜெட்டியில் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை இரு பாகங்களாக மணிரத்தினம் வெளியிட போவதாக தெரிவிக்கபட்டது. இதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஜெயராம் என பலர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் . இது உண்மைதான் என்பதை நிரூபிக்க, கூடிய விரைவில் நடிகை, நடிகையர் யார் யார்? என்று தெரிவிக்க உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படத்தினுடைய பாடலை கம்போஸ் செய்து முடிவடைந்துவிட்டதாம்.

இந்தநிலையில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என லைக்கா நிறுவனத்தில் விசாரித்த போது, தற்போது படத்திற்கான படப்பிடிப்பு முன் பதிவு வேலைகள் நடப்பதாகவும், டிசம்பரில் படத்தினுடைய வேலைகள் ஆரம்பமாகும் என தெரிவித்ததுமட்டுமில்லாமல், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிருக்கும் நடிகர் நடிகைகள் யாரும் படப்பிடிப்பு முடிவும் வரை வேற படங்களில் நடிக்க கூடாது என மணிரத்தினம் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp