Skip to content
Thamizh Padam

News

News1 min read

பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பு கதா பாத்திரத்தில் கார்த்தி

தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை மூலமா தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர்தான் முன்னணி இயக்குனர் மணிரத்னம். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளிவந்த "செக்க சிவந்த வானம்" படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. முக்கியமாக இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் என பலர் நடிக்க இருக்கிறார்கள் என செய்தி வெளியாகியிருந்தது.

தற்போது நடிகர் கார்த்தியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அடுத்ததா வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பொன்னியின் செல்வன் படத்தினுடைய முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனைவருக்கும் சரித்திர கால சண்டை பயிற்சி, நடை உடை பாவனை என்று எல்லாவற்றையும் முறையாக பயிற்சி கொடுக்கப்போகிறாராம் இயக்குனர் மணிரத்னம்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp