Skip to content
Thamizh Padam

News

News1 min read

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படம் “ கருத்துக்களை பதிவு செய் ”

M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படமாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை ராகுல் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 , மற்றும் 1 A.M என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். கதை திரைக்கதை வசனம், ராஜசேகர்.

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. சமூக வலை தல மான பேஸ்புக் பற்றியது தான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி ,காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள் என்பது தான் கதை.

இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம் தான் இது. படம் விரைவில் வெளி வர உள்ளது என்கிறார் இயக்குனர் ராகுல்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp