Skip to content
Thamizh Padam

News

News1 min read

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா

பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன்நம்பர் 2.

இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும்வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும்செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன்இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்துநடைபெறவிருக்கிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp