Skip to content
Thamizh Padam

News

News1 min read

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு கண்டிஷன் - தெறிக்குக் அப்டேட்!!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு மற்றும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிக்பாஸ் குழுவினர் வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே போட்டியாளர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

மேலும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் இந்த ஆண்டு வேற லெவலில் போட்டியாளர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp