Skip to content
Thamizh Padam

News

News1 min read

பேட்ட படத்தோட கதை என்னவாக இருக்கும்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.0 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பேட்ட படத்தின் ரிலீஸிற்கு தயாராகி விட்டார் தலைவர் ரஜினி. இந்த படத்தின் பாடல்கள், டீஸர் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனதால், சூப்பர் ஸ்டார் "He is Back" என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

முக்கியமா பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை ரசித்து படம் எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் இந்த படத்தின் டீஸர், போஸ்டர்கள் எல்லாம் பார்க்கும் போது பாஷா, படையப்பாவில் வரும் ரஜினியை போல மாற்றி இருக்கார் என்பது தெரிகிறது.

பேட்ட படத்தோட கதை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பெரிய குழப்பத்தில் இருக்கின்றனர். இதுபோக அதற்கு ஏற்றார் போல் சமூக வலைதளங்களில் இதுதான் கதை, அதான் கதை என நிறைய உலா வருகிறது. இப்போதும் அப்படி ஒரு கதை விவரம் வைரலாகிறது. அதாவது இந்த படம் இந்து முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலை பற்றியதான கதை என்று கூறப்பட்டு வருகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp