Skip to content
Thamizh Padam

News

News1 min read

பெண் காவலாளிக்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டு !!

காக்கும் ஐயனார் காவல்துறையினருக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்தார். டோலிவுட் ‘மெகா ஸ்டார்' நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் மே 10-ஆம் தேதி அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரி, மனநிலை பாதிக்கப்பட ஒரு வயதான பெண்ணுக்கு உணவு ஊட்டுவிட்ட வீடியோவைக் கண்டதாக தெரிவித்தார். அந்த வீடியோவைப் பார்த்தபோது, அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். மேலும், ஒரு பெண்ணின் தாய்மை உள்ளுணர்வு என்பது அக்கறை காட்டுதல், அன்பு காட்டுதல் மற்றும் உணவளித்தல் என்பதாகும் என்று சிரஞ்சீவி கூறியுள்ளார்.

மேலும், அந்த துணிச்சலான பெண் காவல்துறை அதிகாரியுடன் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகக் கூறிய சிரஞ்சீவி, அந்த வீடியோவை தனது அடுத்த பதிவில் வெளியிடுவதாகக் கூறினார். மேலும், எந்த ஏழை மக்களும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.அதையடுத்து அவர், ஒடிசாவைச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளரான சுபஶ்ரீ உடன் தான் பேசிய வீடியோ காலை பதிவிட்டார்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp