Skip to content
Thamizh Padam

News

News1 min read

பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் 'குச்சி ஐஸ்' தமிழ்ப் படம்

பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக 'குச்சி ஐஸ் ' என்கிற தமிழ்ப் படம் உருவாகிறது.

இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி ஏற்கெனவே 'சாதிசனம்' , 'காதல் fm' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கின்ற 'குச்சி ஐஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

'நாடோடிகள்' மற்றும் விஜய் டிவியின் பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் என்று பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். பழநீஸ். Ks. ஒளிப்பதிவு செய்கிறார். தோஷ் நந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். குறிப்பாக உலகமயமாக்கல் எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்வதுதான் இந்த படம்.

முக்கியமாக 'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாதம் படம் வெளியாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp