Skip to content
Thamizh Padam

News

News1 min read

பப்ஜியில் இணைந்த மூன்று நடிகைகள்

'தாதா 87' படத்தை இயக்கிருந்த விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் மட்டுமில்லாமல் நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் புகழ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளனர். அது யாரென்றால், கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர் ,பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் இந்த படத்தில் நடிக்கும் அந்த மூன்று நடிகைகள் என்றே சொல்லவேண்டும். இதுமட்டுமில்லாமல் மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp