Skip to content
Thamizh Padam

News

News1 min read

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது சமீபத்திய வருடங்களில் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பழக்கப்பட்டவார்த்தை என்று கூறலாம். தற்போது அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ‘தப்பு தண்டா' புகழ் சத்யமூர்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'. ஹாரர்-காமெடி கலந்து உருவாகிவரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ‘பிக் பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த், ‘எருமை சாணி' புகழ் ஹரிஜா, விஜய் குமார், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ‘மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என யூ-டியூப் பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

இதனை நடிகர் சத்யமூர்த்தியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘CLAP BOARD புரொடக்ஷன்' மூலம் தயாரித்து வருகிறார். கௌசிக் கிரீஸ் இசையமைத்து வரும் இதற்கு ஜோஸ்வா ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இம்மாதம் 11-ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் பாடல் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' முதல் சிங்கிளாக வெளியாகவுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி இப்பாடலை எழுதி பாடியுள்ளார்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp