Skip to content
Thamizh Padam

News

News1 min read

நடிகைகள் கூறும் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு: நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவிப்பு

சென்னையில் ‘சண்டக்கோழி 2’ படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சினிமா துறையில் பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க 3 பேர் குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறினார்.

இதில், ‘மீ டூ’ இயக்கம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள் விக்கு பதில் அளித்து விஷால் கூறியதாவது:

பல துறைகளைச் சேர்ந்த பெண் களும் கடந்தகாலத்தில் பாலியல் ரீதியாக தாங்கள் சந்தித்த பிரச்சி னைகளை சமூக வலைதளங் களில் ‘மீ டூ’ இயக்கம் மூலம் தற்போது பகிர்ந்து வரு கின்றனர்.

திரைப்படத் துறையைச் சேர்ந்த பெண்கள் கூறும் பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார் விஷால்.

இந்த நிகழ்ச்சியில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp