2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Mr Local Movie Review
ராஜேஷ் படங்கள் என்றாலே குடும்பத்துடன் வந்து எந்த ஒரு எமோஷனல் காட்சிகளும் இல்லாமல் சிரித்து ரசிக்ககூடிய படமாக இருக்கும் அதே போல் தற்போது லோக்கலாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவருடைய அம்மா ராதிகா ஒரு சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.அதனால் அவரை அழைத்துக்கொண்டு அந்த நடிகையை பார்க்க போகும் போது, நயன்தாரா அவர்களை காரில் இடித்துவிடுகிறார். இப்படி சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா என இருவருக்குமான மோதல் தொடங்க, பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:
சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயனின் கடைசி படத்தில் பில்டப்பாக வந்தது போல் இல்லாமல் எளிமையான அறிமுகத்துடன் வந்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஒரு காட்சியில்
நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு என்று கேட்பார், அதேபோல் நமக்கும் நம்ம சிவகார்த்திகேயனுக்கு என்ன தான் ஆச்சு என்று கேட்க தோன்றுகின்றது. தொடர் ஹிட் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கவனம் செலுத்திருக்கலாமோ என்ற எண்ணம் பல இடங்களில் தோன்ற வைக்கின்றது.
மற்ற படங்களில் எப்படி ஹீரோயின் பின்னாடியே சுற்றுவாரோ அது மாதிரித்தான் இதிலும் இருக்கின்றார், குறிப்பாக ஒரு படி மேலே சென்று படம் முழுவதும் நயன்தாராவை டார்ச்சர் செய்கிறார்.
ராஜேஷ் படம் என்றாலே காமெடிக்கு உறுதி என்ற எண்ணத்தோடு பார்க்கலாம், ஆனால், இனிமேல் ராஜேஷ் படம் போகலாமா என்ற நிலை உருவாகிவிட்டது. படத்தில் நிறைய காமெடி நடிகர்கள் இருந்தாலும், ரோபோ ஷங்கர் காமெடி தவிர படத்தில் எங்கு தேடினாலும் படத்தில் காமெடி எடுபடவில்லை. முக்கியமாக யோகி பாபு மற்றும் சதிஷ் காமெடி ரசிக்கும் படியில்லை. ராஜேஷ், படங்களில் சந்தானம் காமெடி இல்லாதாது படத்தை பார்க்கும் போது அப்பட்டமாக தெரிகிறது.
நயன்தாரா பல பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகின்ற இந்த நேரத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனாலும் இந்த படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கட்சிதமாக நடித்துள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy