Skip to content
Thamizh Padam

News

News1 min read

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் ராஜினாமா!!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த கமீலா நாசர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாள் முதலே நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் முக்கிய பொறுப்பை வகித்து வந்தார். அவர் சென்னை மண்டல பொறுப்பாளராக இருந்து வந்த நிலையில் திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டல பதவியை வகித்து வந்த திருமதி கமலா நாசர் அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp