Skip to content
Thamizh Padam

News

News1 min read

மிஸ்கின் அருண் விஜய் இணையும் புதிய கூட்டணி

சைக்கோ' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார். அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார்.

அதையடுத்து, சிம்புவிடம் ஒரு கதையைக் கூறியதாகவும், அந்த கதைக்களத்தில் ஈர்க்கப்பட்டு, மிஷ்கினுடன் இப்படத்தில் பணியாற்ற விருப்பப்படுவதாகவும் தகவல்கள் சமீபத்தில் வெளினாகின. சிம்பு, வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு' திரைப்பட படப்பிடிப்பை முடித்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுவந்தது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவராத இந்நிலையில், தற்போது மிஷ்கினுடன் இணையும் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த ஆச்சரியமான தகவல் கசிந்துள்ளது.

அதாவது, மிஷ்கின் தனது அடுத்த படத்திற்கு, தமிழ் சினிமாவில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்' பட்த்தின் மூலம் மிகப்பெரிய கமேக் கொடுத்து, தற்போது தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துவரும் நடிகர் அருண் விஜயுடன் இணையவுள்ளாராம். இந்த தகவல் உணமையானால் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

அருண் விஜய் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கிய ‘மாஃபியா: சாப்டர் 1' திரைப்படத்தில், ‘ஆர்யன்/டெக்ஸ்டர்' என இரட்டை வேடங்களில் மிரட்டலான நடிப்பில் அசத்தியிருந்தார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp