Skip to content
Thamizh Padam

News

News1 min read

மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தனாவுடன் இணையும் விக்ரம் பிரபு

அசுரகுரு, வால்டர் படத்தை தொடர்ந்து அடுத்தாக வானம் கொட்டட்டும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.

இந்த படத்தை இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது 19ம் வது படமாக வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கயுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இந்த படத்தை இயக்கிறார். இவர் ஏற்கனவே, பாடகர் விஜய்யேசுதாஸ் நடிப்பில் வெளிவந்த படைவீரன் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 96 படம் மூலம் புகழ்பெற்ற இசைமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்தில் இசைமைக்கயுள்ளார்.

அபியும் நானும் படத்தில் ஒளிப்பதிவு செய்த ப்ரீத்தா இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்.வானம் கொட்டட்டும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்ற விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மடோனா செபஸ்ட்டின் நடிக்க இருக்கிறார். முக்கியமாக இன்று இளைஞகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுமட்டுமில்லாமல் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ள படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறார். போகிற போக்கை பார்த்தால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தங்கை வேட நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்கள் போன்று தெரிகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp