Skip to content
Thamizh Padam

News

News1 min read

மலையாளத்திலும் யோகிபாபு !!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த அவரை முதன்முறையாக மலையாள திரையுலகிற்கு அழைத்து சென்றுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன். தற்போது மலையாளத்தில் மஞ்சு வாரியர், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நடிக்க 'ஜாக் அன்ட் ஜில்' என்கிற படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் சிவன்.

இந்தப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் தயாரிக்க உள்ளது. மேலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றில் மலையாளத்தில் பிரபல காமெடி நடிகர் சௌபின் சாஹிரையும், தமிழில் அதே கேரக்டரில் யோகிபாபுவையும் நடிக்க வைத்து படமாக்கியுள்ளார்.

இந்தப்படம் தமிழில் சென்டிமீட்டர் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் பூட்டுதல் முடிந்தவுடன் படம் திரைக்குவர தயாராக உள்ளது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp