Skip to content
Thamizh Padam

News

News1 min read

மகத்தான மனிதர் விஜய் ஆண்டனி !!

மூடர் கூடம் என்ற படத்தின் மூலம் 2013ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானவர் தான் இயக்குநர் நவீன். பல இயக்குநர்களுக்கு தங்களுடைய முதல் படத்தில் கிடைக்காத அங்கீகாரம் இவருக்கும் கிடைத்தது. சிறந்த இயக்கம் மற்றும் நடிப்பால் முதல் படத்திலேயே மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் சிறந்த வசனங்கள் எழுதியதற்காக இவருக்கு விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு சற்று இடைவெளி கொடுத்த நவீன், மீண்டும் சமுத்திரக்கனி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கொளஞ்சி என்ற படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி கண்டார். தற்போது அருண் விஜய், விஜய் அண்டோனி மற்றும் அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களை கொண்டு அக்கினி சிறகுகள் என்ற படத்தை உருவாக்கி வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார் அந்த பதிவில் "ஸ்விச்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காக தாங்கி நடித்ததுதான் பெரியவிஷயம்", என்று குறிப்பிட்டுள்ளார்

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp