Skip to content
Thamizh Padam

News

News1 min read

லெஸ்பியன் டிராமா "ஹோலி வுண்ட்" ஆகஸ்ட் 12, 2022 முதல்

இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த
திரைப்படங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு இடையிலான உறவை சிக்கலை சித்தரிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

ஜானகி சுதீர், அம்ரிதா வினோத் மற்றும் சாபு பிரவுதீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள எரோடிக் டிராமா திரைப்படமான ஹோலி வுண்ட் இந்த வரிசையில் முக்கியமான படைப்பாக இணைந்துள்ளது.

அசோக் R நாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை பால் விக்லிஃப் எழுதியுள்ளார். ஹோலி வுண்ட் பெண் ஓரினச்சேர்க்கை உறவை சுற்றி அமைக்கப்பட்ட டிராமா திரைப்படமாகும்
சிறு வயதில் அன்பாக வளர்ந்த இரண்டு சிறுமிகள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்து, உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றாக வாழ்வில் இணைகிறார்கள்.

இப்படத்திற்கு ரோனி ரஃபேலின் இசையமைக்க, உன்னி மடவூரின் ஒளிப்பதிவு செய்துள்ளார், விபின் மன்னூர் படத்தொகுப்பு செய்துள்ளார். Sahasrara Cinema Pvt Ltd வழங்க, R சந்தீப் தயாரித்துள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் 12 முதல் SS Frames OTT தளத்தில் நேரடியாக திரையிடப்படுகிறது.

வின்சன் C.M PRO

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp