Skip to content
Thamizh Padam

News

News1 min read

குட்டி அருண் விஜய் செய்த புண்ணியம்

கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருக்கும் அருண் விஜய், அவரது உடற்பயிற்சி வீடியோக்களையும், தன் குடும்பத்துடன் செலவிடும் அழகிய நேரங்களின் புகைப்படங்களியும் தன் ரசிகர்களுடன் சமூக சலைதள பக்கங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில், அவர் தனது மகன் அர்னவ் குறித்து பெருமைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அழகிய பதிவை வெளியிட்டுள்ளார். அர்னவ் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு தெரு நாய் மற்றும் அதன் குட்டிகளுக்கு, அதாவது சக உயிரினங்களுக்கு இரக்கத்தைக் காட்டி பலரின் பாரட்டை பெற்றுள்ளார். மேலும் அற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அருண் விஜய் தனது பதிவில் கூறியதாவது "அர்னவ் என்னிடம் வந்து, தன் குட்டிகளோடு பசியோடு இருக்கும் ஒரு அம்மாவுக்கு உணவளிக்க வேண்டும்!! என்றான். அவன் மிகவும் இரக்கத்துடன் வளர்ந்து வருவதில் பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp