Skip to content
Thamizh Padam

News

News1 min read

டாக்டர் படத்தில் கவின் !! - Mass Update

Mass Update

KJ ராஜேஷ் தயாரிப்புல PS மித்ரன் இயக்கத்துல சிவகார்த்திகேயன் கடைசியா நடிச்சு வெளியான படம் தான் ஹீரோ. இந்த படம் படக்குழுவினர் நினைத்த அளவிற்கு ஓடல. முக்கியமா மித்ரன் கிட்ட இருந்து இப்டி ஒரு கதை வரும்னு எதிர்பாக்கலைனு பலராலும் பேசப்பட்டுவந்துச்சு. ஹீரோ படத்தை தொடர்ந்து சிவா அயலான், டாக்டர் னு ரெண்டு படத்துல நடிச்சுட்டு வராரு.

டாக்டர் படத்தை நெல்சன் இயக்கிட்டு வராரு . சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பினை பெற்றிருந்தது.

இப்படத்தில் பிக் பாஸ் கவின் நடிக்கிறார் என்று பல விதமாக கேள்விகள் ரசிகர்களிடம் இருந்து சமூக வலைத்தளங்களில் எழுந்தது.

ஆம் அதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயனுடன் கவின் டாக்டர் படப்பிடிப்பில் இருந்த புகைப்படங்கள் தான்.

ஆனால் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் அளித்த பேட்டியில் "கவின் டாக்டர் படத்தில் நடிக்கவில்லை, ஆனால் இப்படத்தில் அவர் வேலை செய்து வருகிறார்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இருந்தாலும் கவின் ஒரு கேமியோ ரோல் ல நடிக்குறாருனு தகவல் கசிஞ்சுட்டு தான் இருக்கு !! எதுவாக இருந்தாலும் படம் வந்தா தான் தெரியும்

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp