Skip to content
Thamizh Padam

News

News1 min read

காப்பான் ரிலீஸியில் சிக்கல்!!

தளபதி விஜய் நடித்த "கத்தி" படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்தவர்கள் லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு பிறகு சில படங்களை இணை தயாரிப்பில் தயாரித்தும், இன்னும் சில படங்களை தனியாகவும் தரியாரித்துள்ளனர். இந்த நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தையும் லைக்காதான் வெளிட்டுருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்தளவு சென்றடையவில்லை என்பதே உண்மை.

முக்கியமாக இந்த படத்தோட வெளியீட்டின் போது விநியோஸ்கஸ்தர்களிடம் பல கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளதாம். அவற்றை இன்னமும் தராதலால், தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்து செப்டம்பர் 20 வெளிவர இருக்கின்ற "காப்பான்" படத்தை விநியோக முறையிலோ, அவுட்ரேட் முறையிலோ வாங்க வேண்டாம் என்று தமிழ் திரைப்பட விநியோஸ்கஸ்தர் கூட்டமைப்பு அதிரடி முடிவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2.0 படத்திற்காக லைக்கா நிறுவனம் வாங்கிய மொத்த தொகையும் கொடுக்கும் வரை அந்த 'கண்டிஷன்' என தெரிவித்துள்ளனர். ஆகையால் காப்பான் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே உண்மை என்றே சொல்ல வேண்டும்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp