News1 min read
'கைதி' படத்தின் வெற்றி குறித்து நடிகர் கார்த்தி
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர். மாநகரம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இவர் நடிகர் கார்த்தியை வைத்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இயக்கிய படம் தான் 'கைதி'. திரையரங்கில் மக்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படமான இது பெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல்💸 செய்து வருகிறது. இந்நிலையில், இந்த வெற்றியினை அடுத்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.





