Skip to content
Thamizh Padam

News

News1 min read

இந்தியிலும் oh my கடவுளே !!

குறும்படங்கள் மூலம் நாளைய இயக்குனரின் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முதல் படத்துலயே முத்திரை பதித்தவர் அஸ்வத். இவர் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே'. 2017-ஆம் ஆண்டு வெளியான ‘கூட்டத்தில் ஓருவன்' படத்திற்கு பிறகு, 3 ஆண்டுகள் கழித்து அஷோக் செல்வனுக்கு அமைந்த இப்படம், திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்றது.

காதல்-கற்பனை-பொழுதுபோக்கான ‘ஓ மை கடவுளே' நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று மற்றும் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாக அமைந்தது.

இப்போது, அஸ்வத் மரிமுத்து அண்மையில் இன்ஸ்டாகிராம் நேரடி அமர்வின் போது ‘ஓ மை கடவுளே'வின் இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவரே இந்தி பதிப்பையும் இயக்கக்கூடும் என்றும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ஓ மை கடவுளே வெளியாவதற்கு முன்பே, இது தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி ஃபிலிம்ஸ் பெற்றது என்பதும், தெலுங்கு ரீமேக்கையும் அஸ்வத் மாரிமுத்துவே இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp