Skip to content
Thamizh Padam

News

News1 min read

இந்த வருஷம் தமிழ் சினிமாவில் முதலிடம் பெற்றிருக்கும் படம்

இந்த வருஷம் தமிழ் சினிமா நல்ல நல்ல படங்களை கொடுத்திருந்தாலும், அதற்கு ஏத்த மாதிரி ஜி. எஸ். டி வரி, டிக்கெட் கட்டண உயர்வு, தியேட்டர்கள் ஸ்டரைக்கு, என்று நிறைய பிரச்சனைகள் இருந்தது.

இதெல்லாம் தாண்டி சிறிய பட்ஜெட் படத்திலிருந்து பெரிய பட்ஜெட் படங்கள் என்று கிட்டத்தட்ட 171 படங்கள் கிட்ட வெளியாகியிருந்தது. இதிலும் ஒரு சில படங்கள் மட்டும்தான் நல்ல லாபம் பார்த்தது என்பது உண்மை.

இந்தமாதிரி சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் வசூல் நிலவரம் பற்றி விநியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்திருப்பது என்னவென்றால், வெளிவந்த படங்களில் மாஸ் ஹீரோக்களில் ஒருதரான தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படம்தான் முதலிடத்தில் இருந்ததாவும், இதற்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வந்த 2.0 அந்த இடத்தை முறியடித்தாவும் கூறிருக்கிறார்.

ஆகையால் தமிழ் சினிமாவில் நல்ல வசூல் பெற்ற படங்களை வரிசைப்படி பார்த்தால் 2.0 முதலிடத்திலும், சர்கார் இரண்டாவது இடத்திலும், கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் மூன்றாவது இடத்தையும் பெற்றிந்ததாக கூறிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த வருஷத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படங்கள் என்று பார்த்தால் இரும்புத்திரை, 96, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என்றும், இதில் சிறிய பட்ஜெட் படமான ராட்சசன் அதிகமான லாபம் பார்த்தாவும் தெரிவித்திருக்கிறார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp