2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

DC Tamil Movie Review
வழக்கமான ஆக்ஷன் கதையாக இருந்தாலும், அனிருத்தின் மிரட்டலான இசை, லோகேஷ் கனகராஜின் நம்பிக்கையான நடிப்பு மற்றும் அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலிஷ் மேக்கிங் ஆகியவற்றுக்காக 'DC' திரைப்படத்தைத் திரையரங்குகளில் ஒருமுறை கண்டிப்பாகப் பார்க்கலாம்.

DC Tamil Movie Review
Critic · Our rating
வழக்கமான ஆக்ஷன் கதையாக இருந்தாலும், அனிருத்தின் மிரட்டலான இசை, லோகேஷ் கனகராஜின் நம்பிக்கையான நடிப்பு மற்றும் அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலிஷ் மேக்கிங் ஆகியவற்றுக்காக 'DC' திரைப்படத்தைத் திரையரங்குகளில் ஒருமுறை கண்டிப்பாகப் பார்க்கலாம்.
டிசி (2026) - முன்னோட்டம்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி ஆகஸ்ட் 7, 2026 அன்று வெளியாகியுள்ள 'DC' (தாஸ் & சந்திரா / Devadas & Chandra) திரைப்படத்தின் திரை விமர்சனம்
தலைவாசல் விஜய்யின் தலைமையிலான கூலிப்படையில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் (தேவதாஸ்), தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். போலீசாரை தாக்கி அவர்களின் ஆயுதங்களை கடத்துகிறார், இது மிகப்பெரிய விஷயமாக மாறுகிறது. இந்த சமயத்தில் போலீஸ் ஒரு குடும்பத்தை சீரழிக்கிறது.
அந்த குடும்பத்திற்காக போலீஸை கொடூரமாக கொலை செய்கிறார் லோகேஷ் கனகராஜ். போலீஸ் இவர்களை தீர்த்துக்கட்ட தேடுகிறது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் ஒரு லாட்ஜில் தலைமறைவாகிறார்கள். அங்கு சஞ்சனாவை (பார்வதி) சந்திக்கிறார் லோகேஷ்.
அந்த ஹோட்டலுக்கு வரும் போலீஸ் லோகேஷ் பிடிப்பது மட்டுமல்லாமல், லோகேஷுடன் பழகிய சஞ்சாவையும் சுட்டுவிடுகிறது. இதனால் சஞ்சனா இறந்துவிடுகிறார். அவரை காப்பாற்ற முடியும் என்கிற சூழல் இருந்தும் அதை அந்த போலீஸ் அதிகாரி செய்யாமல் கொன்றுவிடுகிறார். போலீஸ் பிடியில் உள்ள லோகேஷ், என்கவுண்டரில் இருந்து தப்பிக்கிறார்.
இதன்பின், விலை மாதுவாக இருக்கும் வாமிகா (சந்திரா) கேபியை சந்திக்கிறார். தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருக்கும் வாமிகா அங்கிருந்து லோகேஷ் உதவியுடன் தப்பிக்கிறார். வெவ்வேறு பாதையில் பயணித்த இவர்கள் இருவரும், உயிருக்கு பயந்து ஓடுவதும், தங்களுக்கு வந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் படத்தின் மீதி கதை.
வழக்கமான ஆக்ஷன் கதையாக இருந்தாலும், அனிருத்தின் மிரட்டலான இசை, லோகேஷ் கனகராஜின் நம்பிக்கையான நடிப்பு மற்றும் அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலிஷ் மேக்கிங் ஆகியவற்றுக்காக 'DC' திரைப்படத்தைத் திரையரங்குகளில் ஒருமுறை கண்டிப்பாகப் பார்க்கலாம்.
Read alsoPhotographer Tamil Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy