Skip to content
Thamizh Padam

News

News1 min read

மாறிய அஸ்வின் - கொஞ்சும் ரசிகைகள் !! இணையத்தில் வைரலாகும் அஸ்வின்

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி முடிவடைந்தது என்பதும், இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கனி வெற்றியாளராகவும், ஷகிலா இரண்டாவது இடத்தையும் அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் என அனைவருமே பிரபலம் ஆகி விட்டாலும் அஸ்வின் வேற லெவலில் பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இளம் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் அவருடைய ரசிகைகளாக மாறி உள்ளனர்

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி அஸ்வின் வேற லெவலில் தனது தோற்றத்தை மாற்றி புதிய ஸ்டில் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை தாடி மீசையுடன் காணப்பட்ட அஸ்வின் இந்த புதிய லுக்க்கில் தாடி மீசை இன்றி கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். அஸ்வின் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் இது அவருடைய புதிய படத்தின் தோற்றமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp