Skip to content
Thamizh Padam

News

News1 min read

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ "பெல்‌"

பீட்டர் ராஜின் புரோகன் மூவிஸ் தயாரிப்பில்
இயக்குநர் வெங்கட் புவன் இயக்கத்தில் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் பழந் தமிழர்களின் மருத்துவம்
சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக "பெல்" உருவாகி யிருக்கிறது.

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கட்
புவன் கூறியதாவது

"பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச் சொல்லி அதை பாதுகாக்கவும்
கட்டளையிட..ரகசியங்
ளைப் பாதுகாப்பதில் நன்மைக்கும் தீமைக்கும்
இடையே நடந்த போராட்டமே படத்தின்
மையக்கதையாகும்.

நான்லீனியர் முறையில் காதல், குடும்பம், ஆக் ஷன் என அனைத்து அம்சங்களும் மிகச் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக
அமைந்த படமாக பெல் இருக்கும்.

இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற படமாக இருக்கும். "

இதில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்"

இப்படத்திற்கு வெயிலோன் கதை வசனம்
அமைக்க, பரணிக்கண்ணன் ஒளிப்பதிவு
செய்ய, ராபர்ட் இசையமைத்திருக்கிறார்.

சென்சார் பணிகள் முடிவடைந்து ஜூன் - யில் பெல் திரைப்படம் வெளியாகிறது

பெல் பட நடிகர்கள்:

குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் மற்றும் பலர்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp