Skip to content
Thamizh Padam

News

News1 min read

'அசுரன்' இந்தி ரீமேக்கில் நடிக்க விரும்பும் நடிகர்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்த படம் அசுரன். படத்துக்கும், அதில் நடித்தவர்களுக்கும் பாராட்டுகளும் கிடைத்தன. இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு, சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து 💸தயாரிக்கின்றனர். 'அசுரன்' படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாக கூறப்படுகிறது. இந்தி அசுரன் படத்தில் ஷாருக்கானே நடிக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp