Skip to content
Thamizh Padam

News

News1 min read

அரசுக்கு சின்னதிரை பிரபலங்கள் நன்றி!!

கொரோனா வைரஸின் விளைவாக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும், திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளன.தற்போது, சில நிபந்தனைகளுடன் சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க கடந்த புதன்கிழமை அன்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தங்களது நன்றிகளை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரபல சினிமா PRO நிக்கில் முருகன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பிரபல நடிகை குஷ்பூ உள்பட பல சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பங்கேற்ற zoom செயலி காணொளிக்காட்சி சந்திப்பில் தற்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் எப்போது படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். குஷ்பு வுடன் சுஜாதா விஜய குமார் உள்ளார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp